இந்தியாவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. மூன்று கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவ தாக்கம் குறைந்தபாடில்லை. இச்சூழலில் இன்றிலிருந்து வரும் 31ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் தொற்றின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. இருப்பினும், தினசரி தொற்று பரவல் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது.
இதுவரை சென்னையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,750ஆக உள்ளது. ஏற்கனவே ராயபுர மண்டலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்திருந்த நிலையில், தற்போது கோடம்பாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் தாண்டியுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- ராயபுரம்- 1,185 பேர்
- கோடம்பாக்கம் - 1,041 பேர்
- திரு.வி.க. நகர் - 790 பேர்
- தேனாம்பேட்டை - 746 பேர்
- வளசரவாக்கம் - 522 பேர்
- அண்ணா நகர் - 554 பேர்
- தண்டையார்பேட்டை - 581 பேர்
- அம்பத்தூர் - 317 பேர்
- அடையாறு - 367 பேர்
- திருவொற்றியூர் - 147 பேர்
- மாதாவரம் - 121 பேர்
- மணலி - 86 பேர்
- பெருங்குடி - 86 பேர்
- ஆலந்தூர் - 80 பேர்
- சோழிங்கநல்லூர் - 95 பேர்