தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாங்காடு அருகே பணிக்குச்சென்ற ஓட்டுநரிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு! - மாங்காடு அடுத்த கோவூர் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன்

அதிகாலையில் பணிக்குச் சென்ற அரசுப்பேருந்து ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு..!
மாங்காடு அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு..!

By

Published : Sep 19, 2022, 7:24 PM IST

சென்னை: மாங்காடு அடுத்த கோவூர் பகுதியைச்சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன்(42), வடபழனி அரசு பணிமனையில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இன்று(செப்.19) அதிகாலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

கோவூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலில் ஒருவர் மட்டும் இறங்கி வந்து, முரளி கிருஷ்ணனிடம் கத்தியைக்காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த பர்ஸை பறித்து, அதில் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு சென்றார்.

மாங்காடு அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு..!

இந்தக்காட்சிகள் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்தச் சம்பவத்தில் பணத்தைப் பறித்துச் சென்ற நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:உளுந்தூர்பேட்டையில் இரவு நேரங்களில் திருட்டு... சிசிடிவி காட்சியில் மர்ம நபர்...

ABOUT THE AUTHOR

...view details