கரோனா வைரசில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் மாஞ்சா நூலில் காத்தாடி விடும் பழக்கம் ஆரம்பித்துள்ளது. கண்ணாடி துகள்கள் அறைத்து மாஞ்சா போடப்பட்ட நூல் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
சென்னையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு மாஞ்சா நூலுக்கு தடை
சென்னை: சென்னையில் மாஞ்சா நூல்களைப் பயன்படுத்த மேலும் இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சா நூல் பயன்படுத்தினாலும் அதனால் யாருக்காவது விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். அதேபோல், மாஞ்சா நூலில் பட்டம் விடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட மேலும் இரண்டு மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 16ஆம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.