தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சாமி கைது.! - மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்

முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் டிவிட்டரில் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே சுவாமியை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

kishore k swamy  puducherry  kishore k swamy arrested in puducherry  chennai news  chennai latest news  cm stalin  kishore k swamy tweet  kishore k swamy tweet issue  அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கு  அவதூறு கருத்து  கிஷோர் கே சாமி  சைபர் கிரைம் போலீசார்  மத்திய குற்றப்பிரிவு  மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்  கிஷோர் கே சாமி கைது
கிஷோர் கே சாமி

By

Published : Nov 21, 2022, 11:03 AM IST

Updated : Nov 21, 2022, 11:19 AM IST

சென்னை:சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. கிஷோர் கே சுவாமி, திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

முன்னதாக திமுகவின் முன்னாள் முதலமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டது என மொத்தம் 7 வழக்குகளில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டு ஜூன் மாதம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த கிஷோர் கே சுவாமி மீண்டும் டிவிட்டரில் அரசியல் விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி மழை வெள்ளத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையிலும், புளியந்தோப்பு(டேஷ்) என தகாத வார்த்தையால் பேசி டிவிட்டரில் கிஷோர் கே சுவாமி பதிவிட்டிருந்தார்.

கிஷோர் கே சாமி பதிவு

இந்த பதிவு முதல்வரை அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக கூறி எழும்பூரை சேர்ந்த இம்ரான் என்பவர் கடந்த 3 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவதூறு பரப்புதல், கலகத்தை தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர்.

ஆனால் சம்மனுக்கு ஆஜராகாமல், இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கிஷோர் கே சுவாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, அதனை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று கிஷோர் கே சுவாமியை பாண்டிச்சேரியில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமியை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

Last Updated : Nov 21, 2022, 11:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details