தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு, கிஷோர் கே. சுவாமி கைது! - சென்னை செய்திகள்

சென்னை: சமூக வலைதளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக கிஷோர் கே.சுவாமியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Kishore K Swamy arrested by Cyber Crime, Chennai for harassment of women on social media
Kishore K Swamy arrested by Cyber Crime, Chennai for harassment of women on social media

By

Published : Jul 29, 2020, 10:05 PM IST

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சுவாமி மீண்டும் சமூக வலைதளங்களில் பெண் பத்திரிக்கையாளர் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்துள்ளார்.

இதனால் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று (ஜூலை 28) பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் அவர் தலைமறைவானார்.

இந்நிலையில் இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கிண்டியில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்களை வெளியிடுவது, பொய்யான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்புவது உள்ளிட்ட ஏராளமான புகார்கள் உள்ளதால் மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details