தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டு பணம் வைத்திருந்தவரை கடத்த முயன்ற 3 பேர் காவல் துறையில் ஒப்படைப்பு - சென்னையில் கடத்தல் முயற்சி பொதுமக்களிடம் சிக்கிக் கொண்ட மூன்று பேர்

சென்னை: வெளிநாட்டு பணம் வைத்திருந்த நபரைக் கடத்த முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

kidnapping

By

Published : Oct 18, 2019, 2:45 PM IST

சென்னை மன்னடியைச் சேர்ந்த ரபியுதின் என்பவர் பர்மா பஜாரில் வெளிநாட்டு பணங்களை மாற்றித் தரும் பணியை செய்து வருகிறார். நேற்று இரவு ரபியுதினை மூன்று பேர் ஆட்டோ டூலம் கடத்த முயற்சித்துள்ளனர். உடனே ஆட்டோவில் இருந்தவாறு தன்னைக் காப்பாற்றும்படி ரபியு சத்தமிட்டுள்ளார். அப்போது, அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடினர். அவர்கள் அனைவரும் ஆட்டோவை மன்றோ சிலை அருகே மடக்கிப் பிடித்தனர். பின்னர் ரபியுதினை, கடத்த முயன்ற மூன்று பேரையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

kidnapping attempt in chennai

மேலும் ரபியுதினிடம் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த கரண்சி நோட்டுகள் கட்டு கட்டாக கைப்பற்றபட்டன. முன்விரோதம் காரணமாக கடத்த முயற்சித்திருக்கலாம் என்ற கோணத்தில், சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருக்கின்றனர்.

இதையும் படிங்க: 'எரிபொருளுக்குப் பதிலாக தண்ணீர் நிரப்பி மோசடி' - இருவர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details