சென்னை மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் ஜானி போஸ்லே. அவரது மனைவி ரந்தீஷா போஸ்லே. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறிய பெண் ஒருவர், அவர்களை கடந்த 12ஆம் தேதி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு வரவழைத்து அங்கிருந்து குழந்தையைக் கடத்திச்சென்றார்.
இதுதொடர்பாக சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி குழந்தையின் தந்தை ஜானி போஸ்லே புகார் அளித்துள்ளார். பின்னர் தனிப்படை அமைத்த காவல்துறை, சிசிடிவி காட்சிகளை வைத்து எட்டு நாட்களுக்குள் குழந்தையைக் கண்டுபிடித்து கடத்திய பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
சிசிடிவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது!