சென்னை அமைந்தக்கரை செல்லம்மாள் தெரு பகுதியில் அருள்ராஜ் - நந்தினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். நந்தினி தனியார் மருத்துவமனையில், மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தையை பள்ளியில் கொண்டு செல்வதற்கும், பள்ளி முடிந்து வீட்டிற்க்கு அழைத்து வருவதற்கும் அம்பிகா(29) என்ற பெண்ணை வேலையில் அமர்த்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த பின், வெகு நேரமாகியும் குழந்தை வரவில்லை என அமைந்தகரை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
அப்போது, பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் கூறினர். இதனையடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக ஆபரேஷனை கண்காணிக்க, அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமி, தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது நந்தினியின் செல்போன் எண்ணிற்கு பேசிய மர்ம நபர் ஒருவர், குழந்தை என்னிடம் தான் உள்ளது. குழந்தை உயிருடன் வேண்டுமென்றால் 60 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.