தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினுக்கு பிரதமர் வேட்பாளராக ஆசையிருந்தால் நிற்கட்டும் - குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவியேற்று சென்னை திரும்பிய குஷ்பூ, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் வேட்பாளராக ஆசையிருந்தால் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 2, 2023, 7:37 AM IST

சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தேசிய மகளிர் ஆணையத்தில் பொறுப்பு தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர், மத்திய அரசுக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. மிகப்பெரிய பொறுப்பை தந்து உள்ளனர். பெண்கள் உரிமைக்காக பல முறை பேசியிருப்பதால் எனக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பல துறையில் பெண்களுக்கு பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். தமிழ்நாடு, டெல்லி, காஷ்மீர் வேறு மாநிலங்கள் என பிரித்து பார்க்க தேவை இல்லை. ஒரு பெண்ணிற்கு பிரச்சனை வந்ததால் கட்சிக்கு அப்பாற்பட்டது. பெண்களுக்கு பிரச்சனை என்பது இந்திய பெண் பிரச்சனையாக பார்க்க வேண்டும். இந்த மாநிலத்தில் குறைவாகவும் அந்த மாநிலத்தில் அதிகம் என பேச வேண்டாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 6 ஆண்டுகள் திமுகவில் இருந்தபோது அவரது உழைப்பை பார்த்து உள்ளேன். ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை இருந்தால் தாராலமாக தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளலாம். ஜனநாயக ரீதியாக பிரதமராகவோ முதலைமைச்சராகவோ வரலாம். மக்கள் வாக்களிக்க வேண்டும். பிரதமர் ஆக வேண்டும் என்றால் மக்கள் வாக்களித்தால் தாராலமாக இருக்கலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் முடிவை பார்ப்போம். என்னுடைய செயல்பாடு பார்த்து தான் பதவி தந்து உள்ளனர். பெண்களுக்கு நல்ல விசயமாக செய்ய முடியும். பெண்களுக்கு பாதுகாப்பு தந்து நியாயம் தருவது. பெண்களின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கிராமப்புற பெண்களுக்கு இது போன்ற அமைப்புகள் இருப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்கட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details