தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலுக்குச் சென்ற தலைவரை விமர்சித்த குஷ்பு! - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: கொடைக்கானலுக்குச் சென்ற தலைவருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி நோய் உள்ளதா? என, திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக வேட்பாளர் குஷ்பு மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

குஷ்பு
குஷ்பு

By

Published : Apr 29, 2021, 9:39 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. மக்கள் கொத்து கொத்தாக மடியும் அவலம், காண்போர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப்போக்குதான் காரணமென திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாட்டி விட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் பற்றி பேசுவதாக சூசகமாகப் பாஜக வேட்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,'ஒரு தலைவர் விடுமுறைக்காக குடும்பத்துடன் விமானத்தில் கொடைக்கானலுக்குச் செல்கிறார். இன்று அவர் வலியைப் பற்றி பேசுகிறார்; கரோனாவுக்கு எதிரான போரில் தோற்றவர்களுகாக துக்கம் அனுஷ்டிக்கிறார். படகு சவாரிக்குச் சென்றபோது, செம்மறி பண்ணைகளுக்குச் சென்றபோது, ஒரு எழில் கொஞ்சும் பின்னணியில் போஸ் கொடுக்கும்போது அவருக்கு என்னானது? தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி நோய்?'எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details