சென்னை:கன்னியகுமாரி அருகே கேரள எல்லையில் விழிஞம் பகுதியில் கேரள அரசு சிறு துறைமுகம் அமைக்க உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு கேட்டு கேரள துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர் கோவில் இன்று (செப்.19) தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவைச் சந்தித்து கடிதம் வழங்கினார் .
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, " கேரளாவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சிறு துறைமுகம் அமைக்கும் பணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறைகளை எடுத்து செல்வது தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை கடிதமாக பெற்றிருக்கிறேன். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர் முதலமைச்சர் முடிவெடுப்பார்.
மாநில அரசின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்
சிறு துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள்தான் செயல்படவேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடாக இருக்கிறது. துறைமுகங்களை சீரமைப்பது தொடர்பான ஒன்றிய அரசின் சட்ட முன்வடிவை எதிர்ப்பது குறித்து கேரளா, கர்நாடகா உள்பட ஒன்பது மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார்.
மாநில அரசின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கேரளாவின் நிலைபாடும் ஒன்றாகத் தான் இருக்கிறது" என்றார்.
அகழாய்வுக்கு கேரளா முழு ஒத்துழைப்பு