தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மூணாறு நிலச்சரிவு: கேரள அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படவேண்டும்' - ஸ்டாலின் - இ-பாஸ், வாகன வசதி

சென்னை: மூணாறில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களைக் காண அவர்களது உறவினர்களுக்கு இ-பாஸ், வாகன வசதியை கேரள அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

kerala landslides: Tamil Nadu government should collaboration with the Kerala government said dmk leader Stalin
kerala landslides: Tamil Nadu government should collaboration with the Kerala government said dmk leader Stalin

By

Published : Aug 9, 2020, 6:01 PM IST

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், 'கேரள மாநிலம், மூணாறு அருகில் உள்ள ராஜமலா பகுதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் 80க்கும் மேற்பட்டோர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கினர்.

இந்த விபத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டின் கோவில்பட்டி, கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள். தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்துள்ளவர்களைக் காணச் செல்ல முடியாமல், உறவினர்கள் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு, இது தொடர்பான உத்தரவினை உடனடியாக அளிக்கவேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளித்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து - உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். மண்ணில் புதைந்து கிடக்கும் அனைவரையும் விரைந்து மீட்டிட மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details