தமிழ்நாடு

tamil nadu

விடுதியில் சந்தேகமான முறையில் இறந்த மாணவி: கரோனா இல்லை என ஆய்வில் தகவல்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் சந்தேகமான முறையில் உயிரிழந்த மாணவிக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

By

Published : May 19, 2020, 11:58 AM IST

Published : May 19, 2020, 11:58 AM IST

keelpakkam-medical-college-student-tests-negative-for-corona
keelpakkam-medical-college-student-tests-negative-for-corona

வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பிரதீபா (22). சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தங்கியிருந்த விடுதி அறையில் கடந்த மாதம் 30ஆம் தேதி சந்தேகமான முறையில் பிரதீபா இறந்து கிடந்தார். இதையடுத்து, அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை கண்டறிய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர். பின்னர், மருத்துவ பரிசோதனையில் பிரதீபா கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இறந்து கிடந்த மாணவி பிரதீபா

இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர், பிரதீபா தற்கொலை செய்யவில்லை என்றும் மாரடைப்பும் ஏற்படவில்லை என்றும் உடற்கூறாய்வின் முடிவில் தெரியவந்தது.

இதனிடையே, திசு பகுப்பாய்வு செய்யப்பட்டதில் பிரதீபாவுக்கு இதய வால்வு பாதிக்கப்பட்டு இருந்ததும் அதில் சில இடங்களில் அடைப்பு இருந்ததும் தெரியவந்தது. ஆகவே, இந்த நோயின் காரணமாக பிரதீபா இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க... மூளைச்சாவு அடைந்த கவுரவ விரிவுரையாளர் உடல் உறுப்புகள் தானம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details