பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற செயலியை தமிழ்நாடு காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களை, இந்த காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மூலம் குறைக்க முடியும் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் துறையினர், பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பெண் பயணிகளுக்கு காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கியும் செயலியின் பயன்பாட்டு குறித்து விளக்கியும் விமான நிலைய காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.