சென்னை:காட்பாடி பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வரும் ஜூலை 13,15,17 தேதிகளிலும், 20 முதல் 26ஆம் தேதிகளிலும், மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை, அவ்வழித்தடங்களில் உள்ள ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதாவது காட்பாடியிலிருந்து 9.55 மணிக்குப் புறப்படும் யஷ்வந்த்பூர் - ஹவுரா சிறப்பு ரயில் 180 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும். 11 மணிக்குப் புறப்படும் யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில் 120 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.
கே.எஸ்.ஆர் பெங்களூரு - காக்கிநாடா, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம், சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு, பெங்களூரு - எர்ணாகுளம், ஹவுரா - பெங்களூரு, தர்பங்கா-மைசூரு, காமகையா-யஷ்வந்த்பூர், டாடா நகர் - எர்ணாகுளம், பாடலிபுத்திரம்- யஷ்வந்த்பூர் உள்ளிட்ட 13 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல விழுப்புரம் - கரூர் சிறப்பு ரயில், வரும் 13ஆம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேல்பாக்கம், திருத்தணி வழியாக வழி மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கமாக நின்று செல்லும் திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது.
இதையடுத்து புராலியா-விழுப்புரம் சிறப்புரையில் வரும் ஜூலை 12,16,19,23 ஆகிய தேதிகளில் மேலப்பாக்கம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக வழி மாற்றப்படுகிறது.