தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூதாட்டி கொலை - 6 சவரன் நகை கொள்ளை - kasimedu

சென்னை காசிமேட்டில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து அவர் அணிந்திருந்த ஆறு சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மூதாட்டி கொலை - 6 பவுன் நகை கொள்ளை
மூதாட்டி கொலை - 6 பவுன் நகை கொள்ளை

By

Published : Jul 29, 2021, 8:51 AM IST

சென்னை:ராயபுரம் காசிமா நகர் 1 ஆவது தெருவில் வசிப்பவர் மைக்கேல் நாயகம், மீனவர். இவரது மனைவி அந்தோணி மேரி (வயது 60). இவர்களுக்கு ரெக்ஸ் என்ற மகனும், சுபா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.

மைக்கேல் நாயகம் நேற்று (ஜூலை 28) வழக்கம் போல் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். வீட்டில் அந்தோணிமேரி தனியாக இருந்துள்ளார். அவரது மகள் சுபா, அந்தோணி மேரியிடம் பேசுவதற்காக செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரம் முயற்சித்தும் செல்போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த சுபா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அந்தோணி மேரி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ராயபுரம் உதவி காவல் ஆணையர் உக்கிரபாண்டியன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அந்தோணி மேரி கழுத்து நெரித்த நிலையில் உடல் மீது மிளகாய் பொடி தூவப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த ஆறு பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து காசிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவின் ஊழல் - நேர்மையான அலுவலர்கள் மீது நடவடிக்கை?

ABOUT THE AUTHOR

...view details