தமிழ்நாடு

tamil nadu

விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து

காசிமேடு மீனவர்களின் விசைப்படகு மீது கப்பல் மோதியதில் அதிர்ஷ்டவசமாக ஏழு பேர் உயிர் தப்பினர்.

By

Published : Jul 19, 2021, 7:12 AM IST

Published : Jul 19, 2021, 7:12 AM IST

Updated : Jul 19, 2021, 9:19 AM IST

விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து
விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து

சென்னை: காசிமேடு பவர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால், படகு ஓட்டுநர். இவருடன் மீனவர்கள் லோகநாதன், அஜித்குமார், ரஞ்சித், மணி, ராஜாக்கண்ணு, அரி ஆகியோர் நேற்று (ஜூலை 18) அதிகாலை காசிமேட்டில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். எண்ணூர் துறைமுகம் அருகே, துறைமுகத்திலிருந்து வெளியே வந்த சரக்கு கப்பல், விசைப்படகு மீது வேகமாக மோதியது. இதில் விசைப்படகு இரண்டாக பிளந்தது. கடலில் குதித்த மீனவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

மீனவர்கள் மீட்பு

இதனையடுத்து அங்கு சென்ற காசிமேடு மீனவர்கள், அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் ராஜாக்கண்ணு என்பவருக்கு மட்டும் காலில் காயம் ஏற்பட்டது.

காசிமேடு மீனவர்கள்

நேரில் ஆறுதல்

ஆர் கே நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே எபிநேசர் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து மீன்பிடி துறைமுக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நடைமேம்பாலங்கள், சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடிங்க' - எ.வ.வேலு

Last Updated : Jul 19, 2021, 9:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details