கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்பவர் சமூக வலைதளங்களில் பல பெண்களிடம் பழகி ஏமாற்றி ஆபாச படம் எடுத்து பணம் பறித்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக, பல பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, காசியை இரண்டு முறை காவலில் எடுத்து விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியே வர வாய்ப்பு உள்ளதால் காசி வழக்கின் முக்கியத்துவம் கருதி குமரி மாவட்ட காவல் துறையினர் சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிப் பரிந்துரை செய்தனர். மேலும், இதற்கிடையில் டிஜிபி பணியிட மாற்றம் பணி நடைபெற்று வந்ததால் தற்போது சிபிசிஐடி டிஜிபியாகப் பிரதீப் வி பிலீப் பதவியேற்றுள்ளார்.
இந்த பரிந்துரையை ஏற்று காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காசி வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் குமரி மாவட்ட காவல் துறையினர் சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க : நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்