தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய கருணாஸ் எம்எல்ஏ - mukkulathor pulipadai karunas

சென்னை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.

mukkulathor pulipadai karunas
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடத்த அனுமதி கோரும் கருணாஸ் எம்எல்ஏ

By

Published : Oct 23, 2020, 4:56 PM IST

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ், சென்னை காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக சாலிகிராமத்தில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வருவது வழக்கம்.

கருணாஸ் எம்எல்ஏ பேட்டி

இந்த ஆண்டு கரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் எவ்வித தடையுமின்றி ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளேன். இந்த மனுவை பெற்ற காவல் ஆணையர் பரிசீலனை செய்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: சீர்மரபினர் கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும்: எம்எல்ஏ கருணாஸ் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details