சென்னை:அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கருணாநிதி பேசினார்.
அவர் கூறியதாவது, "ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்படாததால் அதிகாரம் மையத்தின் ஓபிசி பிரிவினர் தங்களுக்கு உரிய பங்கு பெற முடியவில்லை. ஓபிசி பிரிவினர் உள்ளிட்ட அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்படக்கூடாது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். கிரிமினல் ஏர் முறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும். மண்டலக்குழு பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வு, நீதித்துறை மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளித்திட சட்டம் நிறைவேற்ற வேண்டும்.