தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொருளாதார அடிப்படையில் திராவிட மாடல் என்று ஒன்று கிடையாது' - கார்த்தி சிதம்பரம் எம்.பி. - கார்த்தி சிதம்பரம்

'எனக்குத் தெரிந்தவரை பொருளாதார அடிப்படையில் திராவிட மாடல் என்று ஒன்று கிடையாது' என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம்
செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம்

By

Published : Jul 18, 2022, 10:19 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் எந்த கட்சித் தலைவர்களும் நல்ல நேரம் பார்த்து தான் வேட்பு மனு மற்றும் பதவி ஏற்கின்றனர் எனவும் தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பூமி பூஜையின்போது செய்த சர்ச்சை தேவை இல்லாதது என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “புதிதாக வெற்றிபெற்று வரக்கூடிய குடியரசுத் தலைவர்
இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும். பாஜக அரசு இந்திய அரசியல் சாசன சட்டத்தை தனது செயல்களால் சிதைத்து வருகிறது. மேலும் தற்போது போட்டியிடக்கூடிய வேட்பாளர்களில் காங்கிரஸ் கூட்டணி நிறுத்தி உள்ள சட்டம் தெரிந்த வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வெற்றி பெற வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் மட்டும் அல்ல, மாணவிகளுக்குப் பாலியல் தொடர்பான தொல்லைகள் அளிக்கப்பட்டு வந்தாலும், தற்பொழுது சமூக ஊடகங்கள் மூலமாக வெளியில் வருகிறது. எனவே, எல்லா பள்ளிகளிலும் உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களுக்குத் தேர்வு தொடர்பான மன அழுத்தமும், சமூக ரீதியான அழுத்தமும் உள்ளது. மேலும் கூட்டுக்குடும்ப முறை இல்லாததாலும், மாணவர்கள் கலந்து பேச வாய்ப்பில்லாததாலும் அவர்களுக்கான மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது.

எனவே, பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இல்லாமல், குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு ஒரு மனநல ஆலோசகரை கூட முதல் கட்டமாக நியமிக்கலாம். அமலாக்கத்துறை 20 முறை எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. எதிர்க்கட்சிகளின் நேரத்தை வீணடிக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபடுகிறது. அங்கு எவ்வித விசாரணையும் நடைபெற இல்லை. தேவை இல்லாமல் ஒருவரை விசாரணை என்ற பெயரில் அழைத்து நேரத்தை வீணடிக்கும் செயலில் மட்டுமே அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பாரதிய ஜனதா கட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறையை, தனது கை பாவையாக வைத்து அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப வைத்தது.

தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்திய தர்மபுரி எம்.பி:தமிழ்நாட்டில் திமுக உள்பட யார் பதவி ஏற்றுக்கொண்டாலும் நல்ல நேரம் பார்க்காமல் யாரும் பதவி ஏற்றதில்லை, வேட்பு மனு தாக்கல் செய்ததில்லை; அதில் தவறே இல்லை;அது நமது பழக்கம். அதனை தவறாக எண்ண வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரின் செயல் தேவையில்லாத ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட மாடல் என்பது ஆதிக்க சக்திகளுக்கு எதிராக உருவான இயக்கம். அதனை ஒரு சமூக இயக்கமாக பார்க்க வேண்டும். மேலும் அது ஒரு பொருளாதார ரீதியிலானதா திராவிட மாடல் என்பதை அதனைக் கூறுபவர்கள் தான் நிரூபித்து காண்பிக்க வேண்டும். எனக்குத் தெரிந்தவரை பொருளாதார அடிப்படையில் திராவிட மாடல் என்று ஒன்று கிடையாது.

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அதேபோன்று காங்கிரஸ் கட்சி தற்போது கீழே இறங்கிய நிலையில் இருந்தும், நாட்டில் இன்றும் 20 விழுக்காடு வாக்குகளை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

மேலும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்தினால் மட்டுமே காங்கிரஸ் கட்சி அடுத்த கட்டத்திற்குச் சென்று செயல்பட முடியும். சமூக ஊடகம் என்பது ஒரு உத்தி தான். அது மட்டுமே போதாது. மக்களிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்கள் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காங்கிரஸ் தமிழ்நாட்டில் வளரும்” எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம்

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details