தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பரப்புரைக்குத் தடைவிதிக்கக் கோரி பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "பாஜகவின் சிறுப்பிள்ளைதனம் எல்லையற்றது. அவர்கள் அளித்துள்ள இந்த அற்பமான புகார் குப்பைக்குத்தான் போக வேண்டும்.
ராகுல் காந்திக்கு பொதுமக்களுக்கு மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து பாஜக பாதுகாப்பற்று உணர்கிறது. இந்தியாவில் எந்தக் காவல் நிலையத்துக்கு சென்று யார் மீது புகார் கொடுத்தாலும் புகாரை பெற்றுக்கொள்வார்கள். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்வார்கள். ஆனால் இந்தப் புகாரில் விசாரணை செய்யும் அளவுக்கு எதுவுமில்லை" என்றார்.
இதையும் படிங்க:பாஜக படுதோல்வி அடையும்! - கார்த்தி சிதம்பரம்