முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ஏழு கோடியே 37 லட்சம் ரூபாய் வருமானத்தை மறைத்ததாகக் கூறி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும் தாக்கல் செய்த மனுக்களை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் தாக்கல் செய்த மனுக்கள், இன்று (நவ. 6) நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வருமான வரித்துறை நடைமுறைகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை.