தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவின் நால்வர் குழு சென்னை வருகை; ஆளுநரைச் சந்திக்க உள்ளதாக சதானந்த கவுடா தகவல்! - tn governor

Ex CM Sadananda Gowda press meet : தமிழக ஆளுநரைச் சந்தித்து பாஜகவினர் திமுக அரசால் பாதிக்கப்பட்டது குறித்த அறிக்கையை கொடுக்க உள்ளோம் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அமைத்த நால்வர் குழு தகவல் தெரிவித்துள்ளது.

Ex CM Sadananda Gowda press meet
கர்நாடக மாஜி முதலமைச்சர் சதானந்த கவுடா பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 11:17 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறி பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நால்வர் குழுவை அமைத்தார். இதில் பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சதானந்தா கவுடா, புரந்தேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழுவானது இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சதானந்த கவுடா, “சென்னை தற்போது மேற்கு வங்காளம் மற்றும் கேரளா போல் மாறி வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதனால் எங்களுடைய தலைமை அறிவித்தபடி, பாதிக்கப்பட்டவர்களிடம் மிக ஆழமாக விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரை, எங்களது தொண்டர்கள் எந்த ஒரு பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது. அதற்காக இதை தேசிய அளவில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதுபோல, அரசியல் தாக்குதல் மற்றும் அரசியல் காழ்ப்புணர்சி மூலம் பழிவாங்குதலை ஒருபோதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று 30 முதல் 40 பாதிக்கப்பட்ட பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளோம்.

அவர்களிடம் திரட்டப்பட்ட தகவல்களையும், நாளை பாஜக நிர்வாகிகளின் இல்லத்தில் சென்று அவர்களிடம் பெறப்படும் தகவல்களையும் வைத்து, அதன் மூலம் ஒரு கோரிக்கை மனுவைத் தயாரித்து ஆளுநரிடம் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. எங்களுடைய தேசியத் தலைமைக்கு நாங்கள் மேற்கொள்ளும் விசாரணை அறிக்கையை இரண்டிலிருந்து மூன்று நாட்களில் கொடுக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: களைகட்டிய பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை.. தீபாவளியை முன்னிட்டு ஆடு வாங்க குவிந்த மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details