சென்னை: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க உள்ளது. அம்மாநில தேர்தலில் பாஜக சார்பாக இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அண்ணாமலைக்கு 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், 34 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், "கர்நாடக சட்டமன்றத் தேர்தலை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத முடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 26 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
கட்சி கொடுத்திருக்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைத்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். இதனால் இந்த வெற்றியைக் கொண்டாடுவதில் தவறில்லை. காங்கிரஸ் கட்சிக்கு இன்றிலிருந்து சவால்கள் தொடங்கி உள்ளன.