சென்னை:14 வயது சிறுமியை புத்தாண்டு தினத்தன்று காணவில்லை என அவரது பெற்றோர் மற்றும் கராத்தே மாஸ்டர் ஆகியோர் கண்ணீருடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சிறுமி வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "வீட்டின் அருகே இருந்த ஒரு இளைஞருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சிறுமி மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் தனியார் ஹோட்டலில் அறை எடுத்தும் தங்கியுள்ளார். அதேநேரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டின் அருகே உள்ள கராத்தே பள்ளியில் சிறுமி பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இந்த பள்ளியை 43 வயதான கராத்தே மாஸ்டர் நடத்தி வரும் நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் அங்கு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கராத்தே பயிற்சி வகுப்புக்கு சிறுமி செல்லும் போதெல்லாம், அவரை கராத்தே மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த கொடுமை கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்துள்ளது. மேலும் கராத்தே மாஸ்டர் சிறுமிக்கு 200 ரூபாய் கொடுத்து, நடந்தது பற்றி வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறி வந்துள்ளார். எனவே இதிலிருந்து தப்பிக்க அருகில் உள்ள இளைஞரிடம் சிறுமி பழகி வந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.