மாணவிக்குப் பாலியல் தொல்லை: கராத்தே பயிற்சியாளர் கெபி ராஜ் கைது! - gabi Raj arrested
12:01 May 31
சென்னை: பயிற்சி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபி ராஜ் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா நகரில், தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளி நடத்தி வருபவர் கெபிராஜ். இவர் மீது 26 வயது இளம்பெண் ஒருவர் , அண்ணாநகர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2014ஆம் ஆண்டு, கெபிராஜ் நடத்தி வந்த தற்காப்பு கலை பயிற்சியகத்தில் தான் சேர்ந்ததாகவும், போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் வழியில் காரில் வைத்து தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒத்துழைக்காததால் தன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும், அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக காவல் துறையினர், பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கராத்தே மாஸ்டர் கெபிராஜை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.