தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2019, 6:49 PM IST

ETV Bharat / state

'காப்பான்'கதை விவகாரம்... சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு!

சென்னை: நாளை மறுதினம் வெளியாகவுள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

chennai high court

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் காப்பான். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற தலைப்பில் கதை எழுதி, கதையை பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது வாய்ப்பு தருவதாக கே.வி. ஆனந்த் கூறியதாகவும், இந்த நிலையில், சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் அவர் படமாக்கியுள்ளார். எனவே காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சரவெடி படத்தின் கதை வேறு, காப்பான் கதை வேறு என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் மனுதாரரை எந்த காலத்திலும் தான் சந்தித்தது இல்லை. அதுமட்டுமின்றி அடையாளம் தெரியாதவர்களிடம் கதை கேட்பதுமில்லை. எனவே காப்பான் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தஹ்டு. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், தன்னுடைய விளக்கத்தை கேட்காமல் உத்தரவிட்டுள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஜான் சார்லஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை நீதிபதி மணிக்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details