தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்ட ”கப்பலோட்டிய தமிழன்” - திரையிடப்பட்ட

கலைவாணர் அரங்கத்தில், வ. உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்டது.

நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்ட ”கப்பலோட்டிய தமிழன்”
நவீன தொழில் நுட்பத்தில் திரையிடப்பட்ட ”கப்பலோட்டிய தமிழன்”

By

Published : Sep 5, 2022, 2:17 PM IST

சென்னை:கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு அவரது புகழுக்கு, மேலும் பெருமை சேர்க்கும் வகையில் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னையில் அவரது திருவுருவச் சிலை நிறுவப்படும், ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது இல்லத்திலும், திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்திலும் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும்.

வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்து திரையிடப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த பிரத்யேக காட்சியினை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

நாளை (06.09.2022) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக நவீன முறையில் (Digital) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாம் அனைவரையும் பொதுமக்கள் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரும்... புலம்பிய கவுன்சிலர் ஆடியோ...

ABOUT THE AUTHOR

...view details