தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் விழா - அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் திருக்கோயில்

அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா, விடையாற்றி கலைவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் விழா
மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் விழா

By

Published : Mar 10, 2022, 8:54 AM IST

சென்னை அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரர் திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா மற்றும் விடையாற்றி கலைவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் தொடக்கமாக மாசி 24 மார்ச் 8ஆம் தேதியன்று செவ்வாய்க்கிழமை பகல் விழாவாக அருள்மிகு கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடும், இரவு விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 9ஆம் தேதியன்று பகல் விழாவாக கொடியேற்றம் நடைபெற்றது. இரவு அம்மை மயில் வடிவம் சிவபூஜை காட்சி, மார்ச் 10ஆம் தேதியன்று பகல் விழாவாக வெள்ளி சூரிய வட்டம், இரவு வெள்ளி சந்திர வட்டம், கிளி, அன்னவாகனங்கள் நடைபெறும்.

மார்ச் 11ஆம் தேதியன்று பகல் விழாவாக அதிகார நந்தி காட்சி நிகழ்ச்சியும், இரவு பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்கள் நடைபெறும். மார்ச் 12ஆம் தேதி சனிக்கிழமை பகல் விழாவாக வெள்ளி புருஷா மிருகம், சிங்கம், புலி, வாகனங்கள், இரவு நாகம், காமதேனு, ஆடு வாகனங்கள் நடைபெறும்.

மார்ச் 13ஆம் தேதியன்று பகல் விழாவாக சவுடல் விமானம், இரவு வெள்ளி ரிஷப வாகன காட்சியும், மார்ச் 14ஆம் தேதியன்று பகல் விழாவாக பல்லாக்குவிழா, இரவு ஐந்திருமேனி யானை வாகனங்களும், மார்ச் 15ஆம் தேதியன்று பகல் விழாவாக திருத்தேர் வடம் பிடித்தல், இரவு தேரிலிருந்து இறைவன் திருக்கோயிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

மார்ச் 16ஆம் தேதி பகல் விழாவாக வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி, இரவு சந்திரசேகரர் பார்வேட்டை விழாவும், மார்ச் 17ஆம் தேதியன்று பகல் விழாவாக ஐந்திருமேனிகள் விழா, இரவு இறைவன் இரவலர் கோல விழா நடைபெறும்.

மார்ச் 18ஆம் தேதியன்று பகல் விழாவாக திருக்கூத்த பெருமான் திருக்காட்சி ஐந்திருமேனிகள் விழா, இரவு திருக்கல்யாணமும், மார்ச் 19ஆம் தேதி உமா மகேஸ்வரர் தரிசனம், இரவு பந்தம் பறி விழாவும், மார்ச் 20ஆம் தேதியன்று விழா நிறைவுத் திருமுழுக்கு, இரவு விடையாற்றி தொடக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

இதையும் படிங்க:வானமுட்டி பெருமாள் கோயில் விழா தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details