தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில் யாருக்கோ ஏதோ உள்நோக்கம் இருக்கிறது - நடிகர் ராஜ்கிரண் - நடிகர் ராஜ்கிரண் கருத்து

சென்னை: கந்தசஷ்டி கவசம் தொடர்பான விவகாரத்தில் யாருக்கோ ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது என்ன நடிகர் ராஜ்கிரன் கூறியுள்ளார்.

ராஜ்கிரண்
ராஜ்கிரண்

By

Published : Jul 15, 2020, 5:09 PM IST

கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்தசஷ்டிகவசம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

திரைத்துறை சார்ந்த நடிகர் ராஜ்கிரன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்கிரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,"ஒவ்வொரு மனிதனுக்கும்,
எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது அவனது சுதந்திரம்.
முருகப்பெருமானை நம்புவோர்க்கு,"கந்தசஷ்டி கவசம் என்பது ஒரு பாதுகாப்பு அரண்". இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன.

இறைவனை நம்பாதோர்க்கு, நம்பாமை என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, நம்புதல் என்பது, அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான் மேன்மையானது.

தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,மிகவும் கீழ்மையானது. இந்த கொடிய கரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில் யாருக்கோ ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details