தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீஸ் விசாரணையையடுத்து தற்கொலை செய்து கொண்ட நபர்; உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்! - கண்ணகி நகர் தற்கொலை

சென்னை: காவல்துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட கண்ணகி நகரைச் சேர்ந்த நபரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கண்ணகி நகர் தற்கொலை  kannagi nagar suicide
போலீஸ் விசாரணையையடுத்து தற்கொலை செய்து கொண்ட நபர்; உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்

By

Published : Sep 1, 2020, 9:38 PM IST

சென்னை கண்ணகி நகர் 12ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திரன்(48). இவரது சகோதரி மஞ்சுளா(52) பிரபல கஞ்சா வியாபாரி ஆவார்.

மஞ்சுளா அதே பகுதியில் தன் மகன் முல்லா என்கிற சிவகுமாருடன் வசித்துவந்துள்ளார். முல்லா சிவகுமார்(25) மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த வாரம் கண்ணகி நகர் அருகேயுள்ள ஆர்பிஐ நகரில் வாலிபர் ஒருவரை முல்லா சிவகுமார் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கண்ணகி நகர் காவலர்கள் நான்கு பேரை கைது செய்து முக்கிய குற்றவாளி முல்லா சிவகுமாரைத் தேடிவந்தனர்.

போலீஸ் விசாரணையையடுத்து தற்கொலை செய்து கொண்ட நபர்; உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்

இந்நிலையில், தனது வீட்டில் பதுங்கியிருந்த முல்லா சிவகுமாரை பிடிக்க காவல்துறையினர் வருவதை அறிந்த ராஜேந்திரன் சத்தமிட்டு சிவகுமார் தப்பிக்க உதவிசெய்துள்ளார்.

சிவகுமார் தப்பியோடிய ஆத்திரத்தில் காவல்துறையினர், ராஜேந்திரனை தாக்கி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் விசாரணை முடிந்து வீடு திரும்பிய ராஜேந்திரன் சிறிது நேரம் கழித்து காவல்நிலையம் வந்து காவல்துறையினரிடம் தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து, அவரை சமாதானம் செய்து காவலர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து மனமுடைந்த ராஜேந்திரன் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலைமீட்டு உடற்கூறாய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தாக்கியதால்தான் மனமுடைந்து ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது, மயிலாப்பூர் துணை ஆணையர் செஷாங் சாய் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

இதையும் படிங்க:கணவரை சட்டத்துக்கு புறம்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் சித்ரவதை - பெண் பரபரப்பு புகார்

ABOUT THE AUTHOR

...view details