தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா காரணமாக இந்த ஆண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - கனிமொழி ட்வீட் - திமுக கனிமொழி

சென்னை: கரோனா காரணமாக இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கோரிக்கை வைத்துள்ளார்.

Kanimozhi
Kanimozhi

By

Published : Aug 19, 2020, 3:24 PM IST

Updated : Aug 19, 2020, 4:11 PM IST

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் சுபஸ்ரீ (19) நீட் தேர்விற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் அகாதமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்த நிலையில், தேர்வு குறித்த பயத்தால் தற்கொலையால் உயிரிழந்தார். நீட் தேர்வு பயத்தில் மீண்டும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், “நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல், மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலையால் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. கரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கனிமொழி ட்வீட்

இதையும் படிங்க:நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை - கோவையில் மற்றொரு அனிதா?

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

Last Updated : Aug 19, 2020, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details