மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து வந்த திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசையை தோற்கடித்தார்.
நீ இல்லா நிசப்தம் - கனிமொழி - ட்விட்
சென்னை: மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்களவையின் முதல் கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்கு முன்பு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி குறித்து ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
kanimozhi
இந்நிலையில் 17ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரை முன்னிட்டு இன்று முதன்முதலாக மக்களவைக்கு செல்லும் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'நீ இல்லா நிசப்தம்' என்ற ஒற்றை வரியில் கருணாநிதியின் மறைவை குறித்து ட்விட் செய்துள்ளார்.
Last Updated : Jun 17, 2019, 6:23 PM IST