சென்னை: டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கிரெட்டா தன்பர்க் ட்வீட் செய்திருந்தார். மேலும், அந்த ட்வீட்டில் டூல்கிட் ஒன்றையும் இணைத்து பதிவிட்டிருந்தார். இதனை பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பட்டாளர் திஷா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
கிரெட்டா பகிர்ந்திருந்த டூல்கிட் காலிஸ்தான் ஆதரவு அமைப்பு உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திஷா ரவி நேற்று (பிப்.14) கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் திஷா ரவிக்கு ஆதரவாக, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
திஷா ரவிக்கு ஆதரவாக கனிமொழி எம்பியின் ட்வீட் அதில், "விவசாயிகளை ஆதரிக்கும் ட்வீட்டை, மறு ட்வீட் செய்ததற்காக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. கருத்து சுதந்திரம் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராகவும், திஷா ரவிக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். டூல்கிட் சர்ச்சையில் நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகிய இருவரை கைது செய்ய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். கருத்துச் சுதந்திரத்தை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. இது, ஜனநாயகத்தின் மீதும், மாற்றுக்கருத்துகள் மீதும் அவர்களுக்கிருக்கும் வெறுப்பை தெளிவாக காட்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:டூல்கிட் விவகாரம்: மேலும் இருவருக்கு பிடிவாரண்ட்!