தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்.எஸ். பாரதி கைது: கனிமொழி கடும் கண்டனம்! - ஆர்.எஸ்.பாரதி கைது

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைதுசெய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

kanimozhi
kanimozhi

By

Published : May 23, 2020, 10:52 AM IST

Updated : May 23, 2020, 11:09 AM IST

திமுக கூட்டத்தில் பட்டியலின மக்களை அவமதிக்கும் விதமாகப் பேசியதாகத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று அதிகாலை அவர் கைதானார். அவரின் கைது குறித்து திமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைதுசெய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கோயம்புத்தூரில் கரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. அதைப் பற்றி நேற்று (மே 22) அவர் புகார் அளித்திருந்த நிலையில், இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது

Last Updated : May 23, 2020, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details