டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கனிமொழி எம்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு காவலர்களை அதிகளவில் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்த அவர், "இதுபோன்ற பிரச்னைகள் அரசு அலுவலகங்களில் குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கிறது.
எல்லா இடங்களிலும் இதுபோன்ற மனப்பான்மைகளை சரிசெய்தால்தான் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மொழிக்கும் இந்த நாட்டில் இடம் இருக்கிறது என்ற நம்பிக்கையைத் தரும். நான் படித்த பள்ளியில் ஆங்கிலம், தமிழ் மட்டுமே இருந்தது. இத்தனை ஆண்டுகள் நான் டெல்லியில் இருந்தாலும் இதுவரை நான் இந்தி கற்றுக்கொள்ளவில்லை.