சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்ததாகவும், அதை திமுக மீதான காழ்ப்புணர்ச்சியால் அதிமுக அரசு பராமரிக்காமல் விட்டதே தற்போதைய தண்ணீர் பிரச்னைக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.
‘தண்ணீர் பிரச்னைக்கு அதிமுகவின் காழ்ப்புணர்ச்சியே காரணம்’ - கனிமொழி - Kanimozhi MP byte in Chennai airport
சென்னை: திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீர் மேலாண்மை திட்டத்தை அதிமுக அரசு பராமரிக்காமல் விட்டதே குடிநீர் பிரச்னைக்குக் காரணம் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
kanimozhi
அதேபோல், தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு சிந்திக்கவே இல்லை என குற்றம்சாட்டிய அவர், தண்ணீருக்காக மக்கள் தவித்துக் கொண்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.