தமிழ்நாட்டில் தாலுகா அளவில் நீதிமன்றங்கள் இல்லாத 17 தாலுகாகளில் ரூ.9.47 கோடி செலவில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கடந்த 2007ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் இயங்கிவந்த வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, 50 சென்ட் பரப்பளவில் இயங்கி வந்த அந்த கட்டடம் மற்றும் அதன் வளாகம் சீரமைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்கு தேவையான கூடுதல் கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டன.
ரூ.80.33 லட்சம் மதிப்பீட்டில் செய்யூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான பொறுப்பு நீதிபதிகளாக உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்தவாறு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தொடங்கி வைத்தார்.