சென்னை:காஞ்சிஏகாம்பர நாதர் கோவிலுக்குச் சொந்தமாக கீழ்ப்பாக்கம் ஈ.வே.ரா சாலையில் 1,970 சதுர அடி நிலம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
10 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தில் ஒன்பது கடைகள் செயல்பட்டுவந்தன. இதற்கு முன் ஒப்பந்த வாடகையில் இந்த நிலத்தை பயனாளர் ஒருவர் குத்தகைக்கு எடுத்திருந்த நிலையில், 2014ஆம் ஆண்டு அவர் இறந்தார். அதன் பிறகு சிலர் அறநிலையத்துறைக்கு வாடகை கொடுக்காமல் ஏழு வருடங்களாக கடையை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும், கடைக்காரர்கள் காலி செய்யாத நிலையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகளை அறநிலையத்துறை அலுவலர்கள் இன்று (ஜூலை. 26) காலை தொடங்கினர்.
முதலில் கடைகளுக்கு சீல் வைத்த அலுவலர்கள், ஜே.சி.பி இயந்திரம் மூலம் கடைகளை இடித்தனர். இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மற்றும் துறை ஆணையர் குமரகுபரர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
நிலம் மீட்பு
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "கீழ்ப்பாக்கத்தில் காஞ்சி ஏகாம்பர நாதர் கோவிலுக்கு சொந்தமான 1,970 சதுர அடி ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது.