சென்னை:வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வர இருக்கும் கணம் இந்தப் படத்தின் டீஸர் மற்றும் 'அம்மா’ என்ற பாடலுக்கு சமூக வலைத்தளத்தில் வெகுவாக பாராட்டு கிடைத்தது.
புதுமுகம் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமலா, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.