வருடம் முழுவதும் உழைக்கும் உழைப்பாளர்களை, பெருமைப்படுத்தும் விதமாக, மே 1ஆம் தேதி (இன்று) உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சிறப்பிக்கும் விதமாக அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் என்று பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் உழைப்பாளர் தின வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.