சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் நாகராஜன் என்பவர், முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நண்பர் சங்குகணேசனின் மகள்வழி பேரன் ஆவார். சங்கு கணேசன், சென்னை முத்தையால்பேட்டை வரதா முத்தியப்பன் தெருவில் 1950 இல் சொந்தமாக இடம் வாங்கி ஸ்ரீமகள் கம்பனி என்கிற நிறுவனம் நடத்தி வந்தார்.
அப்போது, அவரது உதவியாளராக ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் அருள்ராஜ் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். ராஜேந்திரன் மறைந்து விட்ட நிலையில், அவரது மகன் அருள்ராஜன் ஆள்மாறாட்டம் செய்து சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சங்குகணேசனின் சொத்துக்களை தனக்கு விற்றது போல் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாக நாகராஜன் புகார் அளித்துள்ளார்.