சென்னை கோபாலபுரத்தில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தொடர்மழை காரணமாக வெங்காய விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வருகிறது. முதலமைச்சர் ஆலோசனையின் படி வெங்காயம் விளையும் இடங்களிலிருந்தே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு 30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றது.
வெங்காயம் மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் கண்காணிக்கப்பட்டு விலை கட்டுக்குள் வைக்கப்படும். வெங்காயத்தின் விலை உயர்வு நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதுதான். மழை காரணமாக விலை உயர்ந்துள்ளது, இதனை சரிசெய்ய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.