’சட்ட மாமேதை’ என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 130ஆவது பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினரும் அவரது திருவுருவச் சிலைக்கும் புகைப்படத்திற்கும் இன்று (ஏப்.14) மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அம்பேத்கரை காலை முதல் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
’அம்பேத்கர் பிறந்தநாளில் இதை செய்வோம்...’ கமல்ஹாசன் ட்வீட் - Ambedkar jeyanthi
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று அவரை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.

கமல் ஹாசன்
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அம்பேத்கரை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில், “’அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும்’ என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வர்ணாஸ்ரம தர்மத்தின் ஆதிக்க கோட்டையை உடைத்தெறிந்தவர் அம்பேத்கர் - வைகோ