தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்.முருகன் மத்திய அமைச்சரா - கமல் வருத்தம் - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டிற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியடைய முடியவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ட்விட் செய்துள்ளார்.

கமல்
கமல்

By

Published : Jul 8, 2021, 12:14 AM IST

சென்னை:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில் புதியதாக 43 அமைச்சர்கள் நேற்று (ஜூலை 7) பதவியேற்றனர். இதில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவரான எல்.முருகனும் ஒருவர்.

இந்த அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ்நாட்டிற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது, அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்க வேண்டும்.

ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநிலத் தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?" எனக் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:புதிய ஒன்றிய அமைச்சர்களுக்கு என்னென்ன துறை?

ABOUT THE AUTHOR

...view details