தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம்: கமல் தனது பாணியில் பதில் - disqualify mla

சென்னை: 'மூன்று எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அவர்களுக்குள் உள்ள பூசலாகத்தான் இருக்கும் என நான் பார்க்கிறேன்' என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

file pic

By

Published : May 3, 2019, 12:28 PM IST

Updated : May 3, 2019, 12:34 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, 'மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை நான் அவர்களுக்குள் உள்ள பூசலாகத்தான் பார்க்கிறேன்.

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரலாம்; ஆனால் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை- என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

கமல்ஹாசன்

மக்களவைத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட விளம்பரம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்' என அவர் தெரிவித்தார்.

Last Updated : May 3, 2019, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details