சென்னை, லயோலா கல்லூரி வளாகத்தில் ’வீடியோ கான் 19’ என்ற தலைப்பில், மூன்று நாட்களாக ’காட்சி தொடர்பியல் துறை’ பயிலும் மாணவர்களால் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் இரண்டாம் நாளான இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
பின்பு, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கமல், ‘தமிழர்களின் கர்ஜனை உள்ளவரை தமிழ் என்னும் காடு பெருகிக்கொண்டே தான் இருக்கும். எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை, மொழி என்பது குழந்தைகளின் 'டயபர் ' போன்றது. மொழி ஒரு தொடர்பியல் கருவி தான் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது, உணவகத்தில் நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை உணவகத்தினர் முடிவு செய்வதில்லை நாம்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்றார்.
மாணவர்கள் மத்தியில் உரையாடும் கமல் மேலும், ‘தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழில் பிறமொழி கலப்பில்லாமல் பயன்படுத்தப் பழக வேண்டும் காதலை சொல்வதும்கூட கூட நாம் ’ஐ லவ் யூ’ என்று தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். தமிழர்களுக்கு உணர்வு உள்ள வரை தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். இதை யாராலும் அசைக்க முடியாது’ என்று கூறினார்.
வேலூரில் தாழ்ந்த சாதியினரை சுடுகாட்டிற்குச் செல்ல வழி விடாததால் ஆற்றுக்குள் கயிறு கட்டி சடலத்தை இறக்கும் அவலத்திற்கு காரணம் இந்த அரசு தான். தாழ்ந்த சாதியினரை நமது சகோதர்களாகதான் பார்க்க வேண்டும். ஆனால் இங்கு சுடுகாட்டில் கூட சமத்துவம் இல்லை என கமல்ஹாசன் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஒரு மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்: கமல்ஹாசன்