கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் கடந்த மே நான்காம் தேதி முதல் ஊரடங்கு விதிகளில் சில தளர்வுகளை அறிவித்தன. மேலும், தமிழ்நாடு முழுவதும் மே ஏழாம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
மாநில அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட பொதுநல வழக்கில் ஊரடங்கு முடியும்வரை தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதித்தும், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யுமாறும் உத்தரவிட்டது
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடை விதித்து, மதுபானங்கள் விற்பனை செய்வது குறித்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கிவிட்டது தமிழ்நாடு அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு பின்னடைவில் முதலிடத்தில் இருக்கிறது - கமல் ஹாசன்