சென்னை:தேசிய கிராம சபை தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் காணொளி காட்சி வாயிலாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். நிகழ்வில் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கிராம சபை தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உறவும் தேவையில்லை, பகையும் தேவையில்லை..!:தொடர்ந்து உரையாற்றிய கமல்ஹாசன், "மக்கள் நீதி மய்யம் கிராம சபையை மக்களிடையே கொண்டு சென்றது, எங்கள் முயற்சி மற்றும் மக்கள் முயற்சியின் காரணமாக வருடத்திற்கு 6 முறை கிராமசபை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் 6000 கிராம சபை கூட்டம் நடத்தினாலும் அதில் செயல்பாடு இருக்க வேண்டும்.
நேர்மையாக கிராமசபை நடத்தப்படுகிறதா, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு கவனிக்க வேண்டும். பல்வேறு கட்சிகள் இருந்தாலும் பல்வேறு சித்தாந்தங்கள் இருந்தாலும் அனைவரும் மக்கள் நலம் என்ற பாதையில் செல்ல வேண்டும். அரசியலில் உறவும் தேவை இல்லை, பகையும் தேவையில்லை.
ஜனநாயகம் எனும் பிரம்மை:கிராம சபை நடத்தும் உறுப்பினருக்கு அமரும்படி ஐந்து மடங்கு உயர்த்திக் கொடுத்து உள்ளனர், அண்டை மாநிலத்தில் பல்லாயிரம் மடங்கு உயர்த்தி கொடுத்துள்ளனர். அங்கே பணிகள் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயும் பணிகள் நடக்கவேண்டும், உயர்த்தி கொடுத்தது மக்களுக்கு தெரிய வந்தால் அவர்கள் கேள்வி கேட்பார்கள். இவ்வளவு ஊதியம் பெற்றும் பணி ஏன் செய்யவில்லை என்று.